தீபாவளி ஸ்பெஷல்… மொறுமொறு ஜாங்கிரி செய்வது எப்படி?

By Minnambalam Desk

|

Published on 8 Nov 2026, 6:00 AM

தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், லட்டு என்று எத்தனை பலகாரம் செய்தாலும், கல்யாண வீட்டு ஜாங்கிரிக்கு இருக்கும் மவுசே தனி.

ஆரஞ்சு நிறத்தில் பார்க்கவே அழகாக இருக்கும் இந்த இனிப்பு, சர்க்கரைப் பாகில் ஊறியும் கடிக்கும்போது கரகரப்பாக இருந்தால்தான் சுவை. இந்த முறை கடையில் வாங்காமல், வீட்டிலேயே செய்து பாருங்கள்.

ADVERTISEMENT

உளுந்து மாவின் பதம்

ஜாங்கிரியில் எல்லாமே உளுந்து மாவு பதத்தில்தான் இருக்கிறது. உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் ரொம்பக் குறைவாகத் தண்ணீர் தெளித்து, வெண்ணெய் மாதிரி நைசாக அரையுங்கள். மாவைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் மிதக்க வேண்டும். அந்த அளவுக்குக் கெட்டியாக இருந்தால்தான் ஜாங்கிரியின் வடிவமும் மிருதுவான உள்பகுதியும் சரியாக வரும்.

ADVERTISEMENT

ஒரு ஸ்பூன் மாவு

அரைத்த உளுந்து மாவில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சோள மாவு அல்லது அரிசி மாவு சேர்த்துப் பிசையுங்கள். இந்தச் சின்ன மாற்றம்தான், பாகில் ஊறிய பிறகும் ஜாங்கிரி கரகரப்பாக இருக்க உதவும்.

ADVERTISEMENT

எண்ணெய் சூடு

மாவைப் பிழிந்து பொரிக்கும்போது எண்ணெய் ரொம்பச் சூடாக இருக்கக் கூடாது. மிதமான சூட்டில், பொறுமையாக இரண்டு பக்கமும் பொரியுங்கள். வெளியே மட்டும் சிவந்து, உள்ளே வேகாமல் இருக்கும் பிரச்சினை இதனால் வராது.

ஒரு கம்பிப் பதப் பாகு

ஜாங்கிரியின் இறுதிச் சுவையைத் தீர்மானிப்பது சர்க்கரைப் பாகுதான். சர்க்கரையை ஒரு கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சுங்கள். பாகு மிதமான சூட்டில் இருக்கும்போது, எண்ணெயிலிருந்து எடுத்த சூடான ஜாங்கிரியை உடனே அதில் போடுங்கள். பாகு ரொம்பச் சூடாகவோ, ஆறிப்போயோ இருக்கக் கூடாது.

இந்த நான்கையும் சரியாகச் செய்தால், இந்தத் தீபாவளிக்கு உங்கள் வீட்டில் கல்யாண வீட்டு ஜாங்கிரி மணக்கும்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel