பிளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து!

By Kavi

|

Published on 8 Nov 2026, 10:07 AM

தனது வீட்டின் முன் காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு ஏராளமான ரசிகர்கள் இன்று காலை முதல் குவிய தொடங்கினர்.

சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து கூறினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து ரசிகர்களை பார்த்து பிளையிங் கிஸ்- ஐ பறக்கவிட்ட ரஜினிகாந்த் பின்னர் வீட்டுக்குள் சென்றார்.

இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel