பெரியார் அறிவக நூலகத்திற்கு கருத்து செறிவற்ற நூல்கள் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகம் நூலகத்தில் தமிழ் நூலக பிரிவில் தரமற்ற ,கருத்து செறிவற்ற நூல்கள் இடம் பெற்று இருப்பதாக புகார் எழுந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் இந்த விவகாரம் தொடர்பாக கட்டுரை ஒன்று எழுதிய நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சியினரும் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் சர்ச்சைக்கு உள்ளான அகல்விளக்கு மற்றும் பினிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களை சேர்ந்த 1800க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நேற்று அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயந்தி ஐஏஎஸ் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராகப் பணியாற்றி வந்த நிலையில், பொது நூலகத் துறை இயக்குநர் பொறுப்பையும் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









