கோவையில் தீபாவளி நாளிலும் தொடரும் மின்வெட்டு: பொதுமக்கள் அதிர்ச்சி!

By Pandeeswari Gurusamy

|

Published on 8 Nov 2026, 11:43 AM

கோவையின் சில பகுதிகளில் தீபாவளி நாளான இன்றும் மின்வெட்டு பிரச்சினை நிலவுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி திருநாளான இன்றும் கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு, சேரன் மாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீபாவளி வியாபாரம் களைகட்டிய நிலையில், நேற்று பகல் நேரத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

மேலும், நேற்று நள்ளிரவிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, இன்று காலையிலும் மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பண்டிகை நாளில் தொடரும் இந்த மின்வெட்டு, குறிப்பாக இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel