தமிழ் நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெருந் தீங்கு- விஜய் அரசை சாடிய சிபிஐ

By Pandeeswari Gurusamy

|

Published on 8 Nov 2026, 10:36 AM

மாநில உரிமைகள் குறித்து ஆராய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட குரியன் குழுவை தவெக அரசு கலைத்துள்ளது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட பெருந் தீங்கு என சிபிஐ விமர்சித்துள்ளது.

இதுகுறித்து சுப்பராயன் எம்பி தனது முகநூல் பதிவில், “ஒன்றிய, மாநில அதிகாரங்கள், மற்றும் உறவுகள் குறித்துஆராய அமைக்கப்பட்டிருந்த உயர் மட்டக்குழுவைக் கலைத்தது, மாநில நலன்களுக்கு எதிரானதாகும்!

ADVERTISEMENT

ஒன்றிய அரசின்’அதிகாரக் குவியல்’முறை, மாநிலங்களுக்கு எத்தகைய தீங்கிழைக்கிறது என்ற கொள்கைபூர்வமான புரிதல், தவெக அரசிடம் இல்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது!

அதிகாரப் பரவலின் அவசியமும், தேவையும் அதிகரித்து வருவதை தவெக அரசு உணராமல் இருப்பது, மாநில நலனுக்கு நல்லதல்ல!

ADVERTISEMENT

பாஜக அரசின் நிர்பந்தத்தால்தான் இந்த தவறான முடிவை தவெக அரசு எடுத்துள்ளது என்றே கருதத் தோன்றுகிறது!

இது ,தமிழ் நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெருந் தீங்காகும்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel