2014, 2019ல் மோடி வெற்றி பெற்ற போது எஸ்ஐஆர் இருந்ததா? ராகுலுக்கு அமித்ஷா கேள்வி!

By Kavi

|

Published on 2 Nov 2026, 10:48 PM

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்தும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரியும் டெல்லியில் இந்திய கூட்டணி கட்சியினர் நேற்று பேரணி சென்றனர். 

ADVERTISEMENT

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய ஆளும் கட்சியான பாஜகவை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் எஸ் ஐ ஆர் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறி தெலுங்கானா பாஜக சார்பில் இன்று பாதயாத்திரை நடத்தப்பட்டது. 

ADVERTISEMENT

நிஜாம் கல்லூரியில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் என்ற இடத்திலிருந்து மொசம்ஜாஹி சந்தை சந்திப்பு வரை நடைபெற்ற பாதயாத்திரையில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பின்னர் உரையாற்றினார். 

அப்போது அவர், “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறது.

ADVERTISEMENT

இதில்,  “6.25 கோடி பேர் தங்களது பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு மாறியவர்கள். சுமார் 3 கோடி பேர் ஏற்கெனவே இறந்தவர்கள்.

சுமார் 1 கோடி பேர் இரட்டைப் பதிவுகளாக இருந்தவர்கள்.

மீதமுள்ள 3 கோடி பேர், வங்கதேசத்திலிருந்து வந்து  ஊடுருவியவர்கள். ஒருவருக்கு இரண்டு வாக்குகள் இருந்தால், அதில் ஒரு வாக்கை நீக்க வேண்டாமா? மூன்று கோடி வாக்குகள் யாருக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறதோ, அந்த நபர்கள் உண்மையில் இல்லை. அவர்கள் வங்கதேச ஊடுருவல்காரர்கள்.

காங்கிரஸ் கட்சி போலி வாக்குப்பதிவின் மூலம் தேர்தல்களைக் கைப்பற்ற முயற்சி செய்கிறது.

2014ஆம் ஆண்டு மோடி வெற்றி பெற்றபோது எஸ் ஐ ஆர் நடைமுறையில் இருந்ததா?. 2019ஆம் ஆண்டிலும் மோடி வெற்றி பெற்றார். அப்போதும் எஸ்ஐஆர் இல்லை.

2024 தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஹரியானாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் வெற்றி பெற்றது. பீகாரிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மக்களின் வாக்குகளால்தான் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் SIR நடவடிக்கையைத் தடுக்க முயற்சி செய்கின்றன.

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தங்களது வாக்கு வங்கியாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்கின்றன. 

இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும். ஒவ்வொரு சட்டவிரோத ஊடுருவல்காரரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்” என்று கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel