பாசிசத்திற்கு ‘வாலாட்டும்’ அப்படி ஒரு ராஜவிசுவாசம் தமிழக வெற்றி கழகத்துக்கு உள்ளது என்று ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் இந்தியா கூட்டணி நடத்திய வாக்குத் திருட்டு எதிர்ப்புப் பேரணியில் தவெக பங்கேற்கவில்லை.
இதை சுட்டிக்காட்டி முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தை திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (நவம்பர் 2) அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“‘வாக்குத் திருட்டு‘ க்கு எதிராகத் தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் ‘தொடை நடுங்கி‘ வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை!
பாசிசத்திற்கு ‘வாலாட்டும்‘ அப்படி ஒரு ராஜவிசுவாசம்!!
இருந்துவிட்டுப் போகட்டும்.
காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு ‘காப்பிரைட்‘ கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை?
பாவம் –
காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்!!” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே, முதலமைச்சர்கள் வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி, டி.கே. சிவகுமார் மற்றும் பிற தலைவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.









