முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழிக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், அன்பில் மகேஷிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரை கடந்த அக்டோபர் 26ஆம் தேதி சென்னையில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதேபோன்று அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை கடந்த அக்டோபர் 30ஆம் தேதி விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரிய போலீசாரின் மனு மீது நவம்பர் 2ம் தேதி உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தார்.
இதையொட்டி இன்று நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்
தொடர்ந்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதி போலீசாரின் கோரிக்கையை ஏற்று அன்பில் மகேஷை மூன்று நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.









