போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

By Kavi

|

Published on 2 Nov 2026, 7:22 PM

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று (நவம்பர் 2) போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

முதலில், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில், “தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

ADVERTISEMENT

8 அரசு போக்குவரத்து கழகங்களின் 21,333 பேருந்துகள் 10,172-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவையினை தினசரி 2.18 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கி வருகின்றது.

இதில் 72% பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு இன்றியமையததாகும்.

போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் முதல்வரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு, 2025-2026-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (02.11.2026) வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel