தீபாவளி பண்டிகைக்கு முன்னும், பின்னும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் விவரத்தை தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.
வரும் ஞாயிறு அன்று நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி வெளியூரில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், ரயில்களிலும், பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதும்.
இந்தநிலையில் ரயில் பயணிகளுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
நவம்பர் மாதத்தில் பயணிகளின் வசதிக்காக 11 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
நவம்பர் 5 (வியாழக்கிழமை)
ரயில் எண் 06104: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும்.
நவம்பர் 7 (சனிக்கிழமை)
ரயில் எண் 06103: சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும்.
நவம்பர் 9 (திங்கட்கிழமை)
ரயில் எண் 06108: ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும்.
ரயில் எண் 06089: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும்.
நவம்பர் 10 (செவ்வாய்க்கிழமை)
ரயில் எண் 06164: திருவனந்தபுரம் வடக்கில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும்.
ரயில் எண் 06037: சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும்.
ரயில் எண் 06038: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும்.
ரயில் எண் 06090: செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும்.
ரயில் எண் 06158: திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும்.\
நவம்பர் 11 (புதன்கிழமை)
ரயில் எண் 06163: தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் வடக்குக்கு இயக்கப்படும்.
ரயில் எண் 06157: சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் வடக்குக்கு இயக்கப்படும்.
பயணிகளின் கூடுதல் வசதிக்காக இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்” என கூறியுள்ளது.









