VIDEO: சோழவந்தானில் பரபரப்பு: இந்தி எதிர்ப்பு போராட்டமாக உருமாறிய ‘நீட்’!

Published On:

| By Mathi

Sholavandan: 'NEET' Protest Transforms into Anti-Hindi Agitation

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாக மாறி உள்ளது.

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு போராடி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

தற்போது டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியினர் நீட் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகின்றனர். தமிழ்நாட்டிலும் இரவு பகல் பாராமல் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திடீரென மதுரை மாவட்டம் சோழவந்தானில் நீட் எதிர்ப்பு போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாக மாறி உள்ளது.

ADVERTISEMENT

சோழவந்தான் ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டு “BAN NEET” ”நீட்டை ரத்து செய்” ”தர்மேந்திர பிரதானே! பதவி விலகு” என கறுப்பு மையால் எழுதப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வே வளாக சுவரிலும்,

ADVERTISEMENT

“மாணவர் போராட்டம் வெல்லட்டும்”!

”நரேந்திரரே! (மோடி) பதவி விலகு”

”தர்மேந்திர பிரதான் பதவி விலகு!”

“பாண்டியன், அந்தோத்யா, பொதிகை வண்டிகளை (எக்ஸ்பிரஸ் ரயில்கள்) சோழவந்தானில் நிறுத்து”! ஆகிய முழக்கங்கள் கறுப்பு மையால் எழுதப்பட்டுள்ளன.

இதனால் சோழவந்தான் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், இந்த முழக்கங்களை அழித்தனர்.

வீடியோ:

படங்கள்:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share