நீட் ரத்துதான் ஒரே தீர்வு.. மு.க.ஸ்டாலின்

Published On:

| By Mathi

NEET Abolition is the Only Solution: MK Stalin

நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்துக்கான ஒரே ஒரு தீர்வு நீட் தேர்வை ரத்து செய்வது மட்டும்தான் என்று திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் தற்போது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

பெரிய அளவிலான முறைகேடுகளை அனுமதிக்கும் வகையில்தான் நீட் (NEET) தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள்தான் முதன்முதலில் எச்சரித்தோம். அதனால்தான், நீட் தேர்வால் ஏற்படும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி, தொடக்கம் முதலே திமுக எதிர்த்து வருகிறது.

சமூக நீதியைப் பாதுகாப்பதிலும், முதல் சட்டத் திருத்தத்திற்கு வழிவகுப்பதிலும் இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழும் தமிழ்நாடு ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைக்கிறது: அது நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பது Abolition Of NEET.

ADVERTISEMENT

மற்ற எந்தக் கோரிக்கைகளையும் விட, நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட்டை ரத்து செய்வதன் மூலம் மட்டுமே இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வை வழங்க முடியும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share