சென்னையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் (Congress) கட்சியினரை கைது செய்த “ அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், “கல்வித் துறையில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து முடக்க நினைக்கும் இந்த அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூரின் இந்த பதிவுக்கு திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில்குமார், “யாரை கண்டிக்கிறீர்கள் என்று பெயர் சொல்ல கூட அப்படி என்ன அச்சம்? நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே.,” என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதில்:

