ராகுல் காந்தி போராட்டம்.. ஆ.ராசாவின் ‘ஒன்லைன்’ பதில்!

Published On:

| By Mathi

Rahul Gandhi's Protest: DMK A. Raja's One-Liner Reply

டெல்லியில் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டது தொடர்பாக திமுக மூத்த தலைவர் ஆ.ராசா எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் முன்பாக நேற்று ஜூலை 21-ந் தேதி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் அனைவரும் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் துரோகத்தால் கடும் கோபத்தில் இருக்கும் திமுக, ராகுல் காந்தியின் போராட்டம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் டெல்லியில் இன்று நாடாளுமன்றத்துக்கு சென்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள், ராகுல் காந்தியின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு, “போராடுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது” என ஒற்றை வரியில் மட்டும் பதிலளித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share