கோபிசெட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் ஏழு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்ட தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் திமுக வேட்பாளர் நல்லசிவத்தை 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
செங்கோட்டையன் 82 ஆயிரத்து 612 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பிரபு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்
