தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 18 May 2026, 12:39 PM

Rajmohan

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். திட்டமிட்டபடி நாளை மறுநாள் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

ADVERTISEMENT

கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் மே 20-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். வரும் கல்வியாண்டில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 1 முதல் புதிய பாடத்திட்டம் தொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், புதிய பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்ட புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel