வீட்டிற்கு 5 வாக்குகள் பாமக-வுக்கு: ராமதாஸ்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் பகுதியில் பாமக-வின் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். “பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் கூட்டத்துக்கு பெண்கள் அதிக அளவில் வருகிறார்கள். அன்புமணி ராமதாசால் மட்டுமே பூரண மதுவிலக்கு, தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் தடையற்ற மின்சாரத்தை வழங்க முடியும். தமிழ்நாட்டில் ஒரு துளி மதுகூட இல்லாத நிலையை உருவாக்குவார். பாமக-வுக்கு குறைந்தபட்சம் ஒரு வீட்டில் 5 வாக்குகள் உள்ளது. எனவே, எங்கள் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel