அதிமுக பிரச்சார வாகனத்தின் ஓட்டுநர் மரணம்

By Balaji

|

Published on 13 Apr 2016, 12:00 AM

அதிமுக தலைமைக்கழகத்திலிருந்து அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சார வாகனம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் முறையில் முதல்வர் ஜெயலலிதா சாதனைகளை விளக்கும் காட்சிகள் திரையில் காட்டப்படும் வசதியுள்ளது. அதில், ஜெயலலிதா பேசுவதையும் காணலாம். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதிக்கு ஏப்ரல் 11-ம் தேதி பிரச்சார வாகனத்தை எடுத்துவந்தார், வேலூர் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதான, அதிமுக தொண்டர் அசோக்குமார். இதில், 11-ம் தேதி பிரச்சாரம் செய்யப்பட்டது. 12-ம் தேதி அனுமதி இல்லாததால் 13-ம் தேதி செய்வதற்கு காத்திருக்க சொன்னார்கள் அதிமுக பிரமுகர்கள். அசோக்குமார், பண்ருட்டி காந்தி வீதியில் பிரச்சார வாகனத்திலேயே படுத்துக்கொண்டுள்ளார். அதிமுக-வினரும் கண்டுக்கொள்ளவில்லை, 12-ம் தேதி இரவு 8.30 மணிக்கு மேல் மின்சார ஒயர் சிக்கி அவர், இறந்துவிட்டதையும் யாரும் கவனிக்கவில்லை. 13-ம் தேதி காலை 10.00 மணிக்கு, பிரச்சாரம் செய்ய வாகனத்தை எடுத்து வருவதற்கு அதிமுக-வினர் செல்போனில் தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஃஆப் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. அதற்கடுத்து, நேரடியாக போய் பிரச்சார வாகனத்தை பார்த்தபோதுதான் அசோக்குமார் இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. மது அருந்திவிட்டு நிதானம் இல்லாமல் படுத்திருந்ததால்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது என்கிறார்கள் அதிமுக-வினர் சிலர். ஆனால், வாகனத்தில் சரியான பாதுகாப்பு இருந்திருந்தால் இந்த இறப்பை தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தே பரவலாகவே உள்ளது அதிமுக-வினர் மத்தியில்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel