முடிதிருத்தும் தொழிலாளியாக ஆர்.ஜே.பாலாஜி

By Kavi

|

Published on 11 Nov 2022, 11:01 AM

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி . கதையின் பிரதான கதாபாத்திரமாக எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் நடிக்கும் புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தை ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் பெயர் ‘சிங்கப்பூர் சலூன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பார்வை போஸ்டரில் கையில் கத்தரி உடன் சலூன் கடையில் பணியாற்றுவது போல இருக்கிறார்  ஆர்.ஜே பாலாஜி. இந்த படம் வரும் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இராமானுஜம்

பட்டத்து அரசனாக அதர்வா

39 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!

5 மருந்துகளுக்குத் தடை : பதஞ்சலியின் பதில்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel