ரெப்போ வட்டி விகிதம் 4 வது முறையாக உயர்வு!

Published On:

| By christopher

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டிவிகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் இன்று (செப்டம்பர் 30) அறிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உயர்த்தியுள்ளது.

ADVERTISEMENT

மே மாதம் 4.40 சதவீதம், ஜூன் மாதம் 4.90 சதவீதம், ஆகஸ்ட் மாதம் 5.40 சதவீதம் என வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதன்மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் தற்போது வரை ரெப்போ விகிதம் மொத்தம் 1.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இதன்காரணமாக குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி என்பது, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி. ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும்போதெல்லாம் வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும்.

இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

வரலாறு காணாத அளவுக்கு இந்தியாவில் உயர்ந்த பணவீக்கம்!

”அப்படி கூப்பிடாதீங்க”: 90’S கிட் கார் ஓட்டுநரின் வேண்டுகோள்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share