கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்: அரசு தரப்பில் விளக்கம்!

இந்தியா

அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடந்து வருகிறது. உக்ரைன் மீது கடந்த 6 மாத காலமாக ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. நாள்தோறும் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெறுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்றிரவு ஜெலென்ஸ்கியின் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் தலைநகர் கீவ் வழியாகச் சென்று கொண்டிருந்த போது மற்றொரு கார் வேகமாக வந்து மோதியதில் விபத்தில் சிக்கியுள்ளது. கார்கிவ் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியை உக்ரைன் ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றியதை தொடர்ந்து, ரஷ்ய பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட ’இசியம்’ பகுதியை ஜெலன்ஸ்கி பார்வையிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் ஜெலென்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் செர்கி நிகிபோரோவ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”அதிபரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதிபருடன் வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்து பெரிய காயம் எதுவும் இல்லை என்று கூறினர். ஆனால் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்களிடம் செப்டம்பர் 21ஆம் தேதி அன்று நடைபெறும் உயர்மட்ட ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்குமாறு ஐ.நா. பொதுச் சபையில் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது விபத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

காலை உணவு திட்டம் எப்படி உதித்தது? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *