உபெர் டிரைவர் ஒருவர் தனது இருக்கைக்கு பின்னால் ‘என்னை அண்ணா என்றோ, மாமா என்றோ அழைக்காதே’ என நோட்டீஸை ஒட்டியுள்ளார்.
இதனை ஒரு பயனர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.
ஓலா, உபெர், ராப்பிடோ போன்ற நிறுவனங்களின் வருகையால் இப்போது எங்கு சென்றாலும் ஆன்லைனில் கார், பைக்கை புக் செய்து பயணம் மேற்கொள்வது எளிதாகி விட்டது.
அப்படி செல்லும்போது ஓட்டுநர் யாராக இருந்தாலும் அவரை மரியாதை நிமித்தமாக அண்ணன் என்றோ, தம்பி என்றோ அழைப்பது அனைவரின் பழக்கம்.
ஆனால் இப்படி அழைத்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட வட இந்தியாவைச் சேர்ந்த 90’S கிட் ஒருவர் செய்துள்ள சம்பவம் தான் தற்போது ஹைலைட்.
உபெர் கார் ஓட்டும் அந்த நபர் தனது இருக்கையின் பின்புறம் கஸ்டமர் பார்க்கும் விதமாக ”என்னை அண்ணா என்றோ, மாமா என்றோ அழைக்க வேண்டாம்” என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
இந்த வித்தியாசமான நோட்டீஸை கார் பயணத்தின் போது கண்ட சோஹினி எம் என்ற ட்விட்டர் பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஓட்டுநரின் நகைச்சுவையான வேண்டுகோளை ரசித்த நெட்டிசன்கள் அது குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் ஒவ்வொருவரும் ஓட்டுநரை எப்படி அழைக்கலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படி பலரும் பதில் தந்து கொண்டிருக்க, உபெர் நிறுவனமும் தன் பங்கிற்கு கருத்தை வெளியிட்டுள்ளது.
அதில் “உங்கள் டிரைவரை எப்படி அழைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டால் ஆப்பில் அவரது பெயரை பார்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அநாகரீகமாக பேசிய பீகார் ஐஏஎஸ்: பதிலடி கொடுத்த தமிழக ஐபிஎஸ்!
பொன்னியின் செல்வன் எப்படி உள்ளது? : ட்விட்டர் விமர்சனம்!