IPL Final : கோப்பையை கைப்பற்றியது ஆர்.சி.பி : 18 வருட கனவு நிறைவேறியது!

Published On:

| By christopher

rcb catched its first ipl trophy in ipl 2025

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது ஆர்.சி.பி அணி. rcb catched its first ipl trophy in ipl 2025

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (ஜூன் 3) இரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

ADVERTISEMENT

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடியில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் துவக்க வீரரான பில் சால்ட் 16 ரன்களுடன் ஏமாற்றினாலும், மற்றொரு துவக்க வீரரான விராட்கோலி (43) பொறுமையாக பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார்.

ADVERTISEMENT

அவருக்கு துணையாக மயங்க் அகர்வால் (24), ரஜத் படிதார் (26), லிவிங்ஸ்டன் (25), ஜிதேஷ் சர்மா (24) ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் ஜேமிசன் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ADVERTISEMENT

தொடர்ந்து 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அணிக்கு பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிராப் சிம்ரன் நல்ல துவக்கம் தந்தனர்.

5 ஓவர்களில் 43 ரன்கள் குவித்த நிலையில் பிர்யான்ஸ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிராப் சிம்ரன் (26) மற்றும் ஜோஸ் இங்கிலீஸ் (39) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் ஸ்ரேயாஸ் (1), வதேரா (15), ஸ்டாய்னிஸ் (6), ஓமர்சாய் (1) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

என்ன தான் ஷசாங்க் சிங் (61*) கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடினாலும் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி.

மேலும் கடந்த 18 வருடங்களாக ஐபிஎல் கோப்பைக்காக போராடி வந்த நிலையில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share