கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்

Published On:

| By Minnambalam

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நூற்றாண்டு 100 ரூபாய் நாணயத்தை இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத்சிங் இன்று மதியம் சென்னை வந்தார். நாணய வெளியீட்டு விழாவிற்கு முன்பாக, மெரினாவில் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

அவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எகிறும் கலைஞர் மார்க்கெட்… ஏங்கும் திமுக தொண்டர்கள்! கலைஞர் நினைவு நாணையம்… எங்கே கிடைக்கும்? எல்லாருக்கும் கிடைக்குமா?

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share