லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் திமுக ரூ900 கோடி நிதி வாங்கியது தொடர்பாக தமிழக சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெற்ற விவாதம்:
மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ்: இந்தியா முழுவதிலும் மது விற்பனையைத் தடை செய்தால் மட்டுமே தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்தியம். இங்கே மதுவிலக்கைக் கொண்டு வரும்போது, பக்கத்து மாநிலங்களில், நமது எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களில், கடந்த கால ஆட்சிகளிலேயே இல்லீசிட் அராக் என்று சொல்லக்கூடிய பொருட்கள் உள்ளே வந்து கொண்டிருந்தன. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
எங்களது அரசு மதுவை மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வண்ணம் செய்யக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. அதனால்தான் கோயில், பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள கடைகளை நாங்கள் மூடிக்கொண்டிருக்கிறோம்.
மதுவினால் வரக்கூடிய வருமானத்தை உயர்த்துவோம் என்று எங்குமே சொன்னதும் கிடையாது; மதுவினால் வரும் வருமானம் உயர்வதற்குச் சந்தோஷப்பட்டதும் கிடையாது.
நாங்கள் இப்பொழுதும் அந்த 717 கடைகளை மூடிய பிறகும், எப்படி வருமானம் அதிகமாகிறது என்று உறுப்பினர் கேட்டார்.. இந்தத் துறையில் இருக்கிற ஊழல்களை ஒழித்ததனால் வருமானம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் அதிகமான வருமானம் வரும்.

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு: மதுவிலக்கு மானியக் கோரிக்கைகளை குறித்து விரிவாக பேசிக் கொள்கிறோம்.
“நாங்க லீக்கேஜ் எல்லாம் நிறுத்தி இருக்கிறோம்.. அதனால் வருமானம் கூடி இருக்கிறது” என்கிறார் அமைச்சர் விக்னேஷ். இந்த அரசு மதுக் கொள்கைக்கு எதிரான அரசு என்பதை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். 5 ஆண்டு காலத்தில் நீங்கள் படிப்படியாக மதுபான கடைகளை குறைக்கப் போகிறீர்களா?
வெளிப்படையாகவும் உங்களுடைய மானிய கோரிக்கையில இந்த இந்த ஆண்டு இந்த இந்த கடைகளை நாங்கள் குறைப்போம் என்று நீங்கள் அறிவிக்கப் போகிறீர்களா?
717 கடைகள் குறைக்கப்பட்டது என்பது எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கடைகள் குறைக்கப்பட்டன? என்பது யாருக்கும் தெரியவில்லை. அதுபற்றிய அறிவிப்பும் இல்லை.
வரும் ஆண்டுகளில் எத்தனை கடைகளைக் குறைக்கிறோம் என்பதை இப்போது சொன்னாலும் சரி.. மானிய கோரிக்கையில் விளக்கமாக சொன்னாலும் சரி..
அமைச்சர் அருண்ராஜ்: சென்ற ஆட்சி காலத்தின் ஊழலைக் குறைத்ததால் வருமானம் அதிகரித்தது என்று மாண்புமிகு அமைச்சர் குறிப்பிட்டார். உடனே திமுக உறுப்பினர்கள் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார்கள்.
அமலாக்கத்துறை நீண்ட நெடிய ஆதாரத்துடன் ஒரு அறிக்கையை சமர்பித்தது. ஆனால் உரிய நேரத்தில் எஃப்.ஐ.ஆர் செய்யப்படவில்லை.
திமுக ஆட்சி காலத்திலேயே அதற்கான போதிய ஆதாரங்களும் இருந்தன. நிச்சயமாக இதை யாரும், எந்த ஆட்சி யார் வந்தாலும் அந்த ஆதாரங்களை எடுக்கவே முடியாது, அழிக்கவும் முடியாது; நிச்சயமாக இருக்கிறது.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: மதுவிலக்கு கொள்கைங்கிறது எங்களுடைய கொள்கை; போதை இல்லாத தமிழகம் எங்களுடைய கொள்கை.
ஆட்சிக்கு வந்த பின்பும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், இங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களும் சரி, இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்களும் சரி, எந்த தொழில்களிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது.
ஆட்சிக்கு வந்த பின் திமுகவுடைய பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா?
திமுகவுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா?
அப்ப, சாராய ஆலை நடத்திக்கொண்டு, டாஸ்மாக் நிறுவனம் மூலம் ஆர்டர் யார் வாங்குனது?
இதுக்கு பேருதான் Conflict of Interest. திமுகவே அரசு, திமுகவுல இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சாராய ஃபேக்டரி நடத்துறாங்க, திமுகவுடைய பொருளாளர் சாராய ஃபேக்டரி நடத்துறாங்க, திமுகவுடைய ஐ.டி. மினிஸ்டரா இருக்கிறவரு சாராய ஆலை நடத்துறாங்க.
இதற்கு மேல என்ன ஆதாரம் வேணும்? (அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்து லாட்டரி .. லாட்டரி என குரல் வந்தது)
மாண்புமிகு உறுப்பினர்கள் லாட்டரி என்கிறார்கள்.. உதயநிதி அவர்கள் சொல்லணும். ஏன் 900 கோடி ரூபாயை லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக வாங்கியது என்பதற்கு பதில் சொல்லட்டும்? பதில் சொல்லுங்க.. தைரியம் இருந்தா.. தைரியம் இருந்தா.. லாட்டரி நிறுவனத்திலிருந்து 900 கோடி ரூபாய் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏன் வாங்கினார்கள்? தைரியம் இருந்தா சொல்ல சொல்லுங்க.. அப்ப சொல்லுங்க! சொல்லுங்க! நான் எந்தத் தொழிலும் இல்லை.. நான் எந்தத் தொழிலிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தல. தைரியம் இருந்தா சொல்லச் சொல்லுங்க.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: திமுக ஏன் லாட்டரி நடத்துகின்ற நிறுவனத்திடம் இருந்து ஃபண்ட் வாங்கினாங்க? என அமைச்சர் கேட்கிறார். அது கொடுத்தது அவருடைய மாமனார்தான். அவருடைய மாமனாரிடம் கேட்டு, அந்த விளக்கத்தை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: அது அவருக்கும் உங்க அப்பாவுக்கும் மட்டும்தான் தெரியும், உங்க அப்பாகிட்டதான் கேட்கணும். எனக்கு தெரியாது.
அப்பாவை… அப்பாவை இங்க காணோம்.. வீட்டுக்குப் போய் உங்க அப்பாகிட்ட கேளுங்க. உங்க அப்பா கரெக்டா சொல்லுவாரு, ஏன் வாங்குனாருன்னு உங்க அப்பா சொல்லுவாரு. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
