‘குட்டி ஸ்டோரி’ முதல் ‘ஸ்டாலின் ஆக்ஷன்’ வரை – பேரவையில் விளாசிய விஜய்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது குறித்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி பேசி உள்ளார்.

சட்டசபையில் இன்று (ஜூன் 23) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT

இருப்பினும் சட்டப்பேரவையில் பேசிய விஜய், “எனக்கு ஒரு குட்டி கதை ஒன்னு ஞாபகம் வருது, சொல்லலாமா?

ஒரு ஊர்ல ஒரு பெரியவர், வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லிட்டு கண்ணுக்கு மேல கை வச்சுக்கிட்டு இப்படி சுத்தி முத்தி தேடிட்டு இருந்தாராம். அப்ப கூட இருந்த ஒரு சின்ன பையன், ‘என்ன தேடுறீங்க?’ அப்படின்னு கேட்டானாம் அதுக்கு அந்த பெரியவர் சொன்னாராம், ‘அது ஒன்னும் இல்ல தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க… உங்க அப்பாவைக் காணோம்?

ADVERTISEMENT

இல்ல… எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா, சம்பந்தம் இல்லாத குட்டி கதை… இதெல்லாம் எங்களுக்கும் பேச தெரியும் அந்த கதையில பெரியவர் அப்படி கேட்டாராம், அதனால யாரும் இங்க டென்ஷன் ஆக வேண்டாம்.” என்றார்.

மேலும் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வதைச் சுட்டிக்காட்டி போயிட்டாங்க. பேசலாமா? என்று சபாநாயகரை நோக்கி கேட்டார்.

ADVERTISEMENT

அதற்கு சபாநாயகர் உங்க கருத்துக்களை நீங்க முழுமையாக, மன நிறைவோடு பேசலாம். சரி, அதான் அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல இந்த ஆட்டம் ஆயிடுச்சு, இன்னும் பேசு பேசு என்றால் நான் என்ன பண்றது?”என்றார்.

மேலும் பேசிய அவர் தனது உரையை முடிக்கும் போது எதிர்கட்சி தலைவர் பேசும் போது evils evils என்று சொன்னார்.ஒன்றே ஒன்றுதான் சொல்ல தோன்றுகிறது Devils பேசக்கூடாது என்றார்.

பின்னர் சபாநாயகரை நோக்கி அவர்கள் இருந்திருந்தால் ஒரு ஆக்ஷன் பண்ண வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எல்லோரும் போய் விட்டார்கள் இப்போது பண்ணலாமா என்றார்.

அதற்கு சபாநாயகர் இப்போதும் பண்ணலாம் ஒன்றும் தவறு இல்லை என்றார்.

உடனே தேர்தலுக்கு முன் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சு வார்தை நிறைவடைந்ததை சுட்டிக்காட்டி செய்த செய்கையை சட்டப்பேரவையில் செய்து காட்டினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share