வைஃபை ஆன் செய்ததும், ”எதிர்த்து நில்லு… துணிந்து வெல்லு… காலம் மாறுது, களம் மாறிடுச்சு”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. சட்டசபையில அனல் பறக்குது போல..
ஆமாங்க ப்ரோ.. சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முதல் நாள் உதயநிதி ஸ்டாலினை கைது செஞ்சதால ‘பனிப்போர்’ இப்ப ‘அக்னி போர்’ ஆகிடுச்சுங்க ப்ரோ..
ஏன்னா சட்டசபையில ஒவ்வொரு நாளும் நடக்கிற ‘சம்பவங்கள்’ அத்தனையுமே திமுக- தவெக இடையேயான மோதலை ரொம்பவே அதிகமாக்கிக் கொண்டே போகுது..

இதை பத்தி கோட்டையில சீனியர் ரிப்போர்ட்டர்ஸ்கிட்ட பேசுனப்ப, ”கடந்த காலங்களில் ஜெயலலிதா சிஎம்மா இருந்தப்ப, அவங்க சபைக்குள் நுழைஞ்சாலும் திமுக எம்.எல்.ஏ.க்கள் யாருமே எழுந்து நிற்கமாட்டாங்க.. அந்த நேரம்தான் அவங்களுக்குள்ளேயே கசமுசான்னு பேசிகிட்டு இருப்பாங்க..

இப்ப, சிஎம்மா விஜய் பதவியேற்ற நேரத்துல, ஸ்டாலின் ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருந்தாரு.. அதுல, ”சட்டசபையில விஜய்க்கு எப்படி மரியாதை கொடுக்கிறது? திமுக எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்துக்கிறது?” அப்படிங்கிற டிஸ்கஷன் நடந்துச்சு.
இதுல பேசுன ஸ்டாலின், “விஜய்க்கு சட்டசபையில் உரிய மரியாதை கொடுங்க.. அவரு சட்டசபைக்குள் வந்தா எழுந்து நில்லுங்க.. அவரு வணக்கம்னு கும்பிட்டா கும்பிடுங்க”ன்னு அட்வைஸ் செஞ்சிருந்தார்.

இதுக்கு அப்புறமா சட்டசபைக்குள் முதல் முறையா விஜய் உள்ளே நுழைஞ்சாரு.. அப்ப திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுவதா? இல்லையா?ன்னு கன்பியூஷன்ல இருந்தாங்க.. ஆனா முன்வரிசையில உதயநிதி, கே.என்.நேரு, எ.வ.வேலு உட்பட சீனியர்கள் எல்லாம் எழுந்து நிற்க, அவங்களும் சட்டுன்னு எழுந்துட்டாங்க.. இப்படிதான் நடந்துகிட்டு இருந்துச்சுங்க..
ஆனா பட்ஜெட் கூட்டத் தொடரில சீனே வேற மாதிரி இருக்குதுங்க..

பட்ஜெட் கூட்டத்துக்கு முதல் நாள் உதயநிதி அரெஸ்ட் நடந்தது.. இந்த கோபத்தைதான் சட்டசபையில இப்ப திமுக வெளிப்படுத்துது..
அதாவது இதுவரை சிஎம் விஜய்க்கு மரியாதை கொடுத்தது போதும்னு முடிவு செஞ்சிருக்கு போல திமுக..

பட்ஜெட் கூட்டத் தொடர் 5-ந் தேதி தொடங்குச்சு.. சிஎம் விஜய் உள்ளே வந்தார்.. போன முறை மாதிரி திமுக சைடுல இருந்து யாரும் இந்த டைம் எழுந்திருக்கவே இல்லை..
நேத்து 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்.. காலையில வழக்கம் போல சட்டசபைக்கு வந்த சிஎம் விஜய், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை பார்த்து வணக்கம் வைச்சுட்டு அப்படியே எதிர்க்கட்சிகள் பக்கமும் திரும்பி ‘கும்பிடு’ போட்டார்.. இது வழக்கத்துக்கு மாறா புதுசா இருந்தது..
ஆனா திமுக சைடுல ஒருத்தர் கூட விஜய் வந்தப்ப எழுந்து நிற்கவும் இல்லை.. பதிலுக்கு ‘கும்பிடு’ போடவும் இல்லை.. இது சிஎம் விஜய்யை ரொம்பவே டென்ஷனாகிடுச்சு போல..
அதனாலதான் இன்னைக்கு அசெம்பிளியில, உதயநிதியைப் பார்த்து, ‘பேப்பர் எல்லாம் படிக்கனும்னு’ சொல்ல.. உதயநிதியோ ‘நீங்க சொல்றது குறுவை தொகுப்பு.. நான் கேட்கிறது வறட்சி நிவாரணம்.. பேப்பர் எல்லாம் படிச்சா மட்டும் போதாது.. விவசாயிகளை சந்திக்கனும்.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டனும்.. அப்பதான் கோரிக்கைகள் என்னான்னு தெரியும்… அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அப்படி என்ன பயம்?”னு பதிலடி கொடுத்தார்..
சட்டசபையில விஜய்- திமுக இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் நிலவரத்தை களேபரமாக்கிட்டுதான் இருக்குங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.
