திமுகவில் எனக்கு முதல் முறையாக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் தற்போதைய பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா என்று திமுகவின் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்: ஆதவ் அர்ஜூனா எனக்கு நல்ல நெருக்கமானவர், அன்பானவர்… அவைத் தலைவர், எங்க நட்பில ஏன் நீங்க தலையிடறீங்க? நாங்க நல்லா நட்பா இருக்கோம், நீங்க அதை ஏன் பிரிக்க நினைக்கிறீங்க?
பொதுப்பணித்துறை அமைச்சர் (ஆதவ் அர்ஜூனா) அவர்கள் மறந்து இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. முதன்முதலில் எங்கள் கட்சியிலே நான் சீட் கேட்டு வந்தபோது, அவர்தான் என்னை அழைத்துக்கொண்டு போய், என் உறவினர், என் சொந்தக்காரர், லீமாரோஸ்.. உட்கார்ந்திருக்காங்க. எனக்காகப் பேசியவர். ஆக, நான் இந்த இடத்தில சொல்லலைனா அது தப்பா போயிடும்.
அமைச்சர் என். ஆனந்தன்: எதுக்கு இதை சொல்றாருன்னு தெரியலையே.. பொதுப்பணித்துறை அமைச்சர் பாட்டுக்குச் சும்மா உட்கார்ந்திருக்கிறார். எதுக்கு அவரை ஏதோ போட்டு கோர்த்து வாங்கிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியலையே?
தற்போதைய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்கான தேர்தல் வியூக வகுப்பு டீமில் பணியாற்றியவர்; பின்னர் விசிகவில் இணைந்தார். அங்கிருந்து விலகி தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
