ஏப்.18-ல் பொன்னேரி, சோளிங்கர், துறையூரில் ராகுல்- ஸ்டாலின் இணைந்து பிரசாரம்!

Published On:

| By Mathi

Stalin Rahul gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஏப்ரல் 18-ந் தேதி தமிழ்நாட்டில் 3 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

திமுக கூட்டணியில் கடுமையாக போராடி 28 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றது. ஆனால் வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் வரை வேட்பாளர்களை அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சியில் இழுபறி இருந்து வந்தது.

ADVERTISEMENT

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆனால் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட யாருமே இன்னமும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய வரவில்லை.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் ராகுல் காந்தி இணைந்து பிரசாரம் செய்வதற்கான திமுகவின் முயற்சிகளுக்கும் ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்து இதுவரை தெளிவான பதில்கள் எதுவும் கிடைக்கவிலை என்பதை டிஜிட்டல் திண்ணையில் ராகுல் முரட்டு பிடிவாதம், ராகுல் சேட்டை என தொடர்ந்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இந்நிலையில் வரும் 18-ந் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு பிரசாரத்துக்கு வருகை தருகிறார்.

அப்போது பொன்னேரி சோளிங்கர் மற்றும் துறையூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share