டிஜிட்டல் திண்ணை: ராகுலின் சேட்டை.. திமுக டென்ஷன்.. தமிழக காங்கிரஸ் கொந்தளிப்பு!

Published On:

| By Mathi

Rahul Gandhi Digital Thinnai

வைஃபை ஆன் செய்ததும், “ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்” பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. சோக கீதமா? வார்னிங் பாட்டா? புரியலையே..

ADVERTISEMENT

உமக்கு பலமுறை சொல்லிட்டேன்.. ஏதோ ஒரு பாட்டுய்யா.. விட்டு விடும்.. எலக்‌ஷனை பத்தி பேசுவோம்..

ஆமாய்யா.. ராகுல் காந்தி இன்னமும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுறாராமே?

ADVERTISEMENT

ஆரம்பிச்சாச்சா.. தமிழகத்துக்கு ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் டெல்லி ‘தலைகள்’ யாரும் வராம இருக்கிறது ரொம்பவே புகைச்சலாகிட்டு இருக்கு.. நாமும் கூட ‘முரட்டு பிடிவாதம் பிடிக்கும் ராகுல்’னு போன வாரம் டிஜிட்டல் திண்ணையில சொல்லி இருந்தோம்..

இப்ப கோவையில பிரஸ் மீட்டில் பேசின பாஜக அண்ணாமலை, “ தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. ராகுல் காந்தி இங்கு திமுக ஜெயிக்க வேண்டாம் என்று நினைக்கிறார்” என அவர் பங்குக்கு கொளுத்திப் போட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

இதை பத்தி நாம முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “திமுகவில ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எல்லாமே ஒரு மாசத்துக்கு முன்னாடியே டூர் புரோகிராம் போட்டு ஆளுக்கு ஒரு பக்கமா தொடர்ந்து பிரசாரம் செஞ்சுகிட்டு இருக்காங்க..

ஸ்டாலின் சைடுல ஒவ்வொரு முறையும் ராகுல் காந்தி தரப்பை காண்டாக் பண்ணி தமிழ்நாட்டுக்கு வர்றதா சொன்னீங்களே? எந்த இடத்துல பாயிண்ட் போடலாம்? அந்த தொகுதியில பாயிண்ட் போட்டுகிட்டா சரியா இருக்கும்னு சொல்றாங்க..

ஆனா ராகுல் காந்தி சைடுல இருந்து, “இப்ப வேண்டாம்.. கண்டிப்பா வருவோம்.. அப்ப சொல்றோம்.. நிச்சயம் பிரசாரத்துக்கு வர்றோம்” .. இப்படியே சொல்லிக் கொண்டிருந்தனர்.

புதுச்சேரியில ஸ்டாலினும் ராகுலும் ஒரே நாளில் பிரசாரம் செஞ்சப்பவும் இதே மாதிரி பதிலை சொன்னாங்க..

அதுக்கு அப்புறமா, “புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் தேர்தல் முடியட்டும்.. இந்த 3 ஸ்டேட்டுலயும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிற சூழ்நிலை இருக்கிறதால அதுல கான்ஸ்ட்ரன்சேன் பண்றாரு ராகுல் காந்தி” என சொல்லப்பட்டது.

இந்த 3 மாநிலத்திலேயும் 1 வாரத்துக்கு முன்னாடியே ஏப்ரல் 9-ந் தேதியே வாக்குப் பதிவு முடிஞ்சிருச்சு..

செல்வப்பெருந்தகை மூலமாகவும் ராகுல், பிரியங்கா காந்தியோட இணைந்து தமிழகத்துல ஸ்டாலின் பிரசாரம் செய்யுறதுக்கான முயற்சி செஞ்சாங்க.. டெல்லியில இருந்து ஒரு சிக்னலும் வரவே இல்லையே..

இப்ப ராகுல் காந்தி ஆபீஸில் கேட்டா, ‘மேற்கு வங்கத்துல பிரசாரம் செஞ்சுகிட்டு இருக்காரு.. தமிழ்நாட்டுக்கு நிச்சயம் வந்துடுவாரு’ன்னு சொல்றாங்க..

அடுத்ததா நாளையில இருந்து பார்லிமெண்ட் கூடுது.. ரொம்ப முக்கியமான செஷன்.. அதனால ராகுல் காந்தி வர சான்ஸ் இல்லை.. இதைத்தான் காங்கிரஸும் சொல்லும்..

ஏப்ரல் 21-ந் தேதி இங்க தமிழ்நாட்டுல பிரசாரம் முடியுது.. ராகுல் காந்தி வரக் கூடிய சான்ஸ் அப்படின்னா ஏப்ரல் 19, 20, 21 தான்.. இதுவும் கூட நிச்சயமும் இல்லை..

ஆனா பாஜகவை எடுத்துகிட்டா இங்கே எப்பவுமே 2 ஹெலிகாப்டர், 1 சிறிய ரக விமானம் ரெடியாக சென்னை ஏர்போர்ட்ல வெச்சிருக்காங்க.. அண்ணாமலையை ஓரம்கட்டிட்டாங்கன்னு சொன்னாலும் அவர் ஹெலிகாப்டர்ல தமிழ்நாடு முழுவதும் ரவுண்டு கட்டி பிரசாரம் செய்யுறாரு..

மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, பியூஷ் கோயல்ன்னு மெகா டீமே களமிறங்கி பிரசாரம் செய்யுறாங்கா.. ஏற்கனவே மோடி, அமித்ஷா பிரசாரம் செஞ்சாலும் இன்னைக்கு கூட நாகர்கோவிலில் மோடி ரோடு ஷோ நடத்துறாரு..
கோவையில 18-ந் தேதி மோடி மீட்டிங் இருக்குது..

ஆனா காங்கிரஸில் கார்கேவும் வரலை… ராகுல் காந்தி பிரியங்கா காந்தியும் வரலை.. தேர்தல் அறிக்கை வெளியிட கர்நாடகா டெபுடி சிஎம் டிகே சிவகுமார் மட்டும்தான் வந்தார்..” என ஆதங்கப்பட்டனர்.

இதை பத்தி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசுனப்ப, “எங்க மேலிடம் இப்படி செய்யவும் கூடாது.. நாம திமுககிட்ட போராடித்தான் 28 சீட்டை வாங்கி இருக்கிறோம்.. அப்ப நாம போராடுனதுக்கு மரியாதை கொடுக்கிற மாதிரி எலக்‌ஷனையும் ஒரு பொருட்டா மதிச்சு பிரசாரத்துக்கு வந்திருக்கனும்.. டெல்லியில இருந்து ஒரு தலைவர் கூட பிரசாரத்துக்கு வரலை.. எங்களை ஆதரிச்சு திமுக தலைவர் ஸ்டாலினும் கூட்டணி கட்சி தலைவர்களும்தான் பேசுறாங்க.. அவங்க கடமையை அவங்க செஞ்சுட்டாங்க..

அதிமுக கூட்டணியில 27 சீட்டு வாங்குன பாஜக எப்படி எல்லாம் பிரசாரம் செய்யுது? ஏன் எங்க டெல்லி மேலிடம் இப்படி வேடிக்கை பார்க்குதுன்னு தெரியலையே..

ஒவ்வொரு தொகுதியிலேயும் திமுக நிர்வாகிகள் கூட நாங்க எப்படி இணக்கமா இணைஞ்சு வேலை செய்யுறது? எங்க தலைவர்களும் களத்துக்கு வந்து பிரசாரம் செஞ்சால்தானே கூட்டணி கட்சிகளுக்குள் ஒரு இணக்கமான சூழ்நிலை இருக்கும்.. இது என்னமோ 28 சீட்டை வாங்கி கொடுத்துட்டு எங்களை தனியே தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிற கதையாதான் இருக்குது.. இன்னைக்கு கூட தூத்துக்குடிக்கு வரப் போறார் ராகுல் காந்தின்னு சொன்னாங்க.. ஆனா வரலையே.. இப்படி செஞ்சா அண்ணாமலை மாதிரி எல்லாரும் கிண்டல்தானே செய்வாங்க..” என குமுறிக் கொட்டுகின்றனர்

அத்துடன், “இத்தனை நாள் விட்டாச்சு.. பார்லிமெண்ட் கூட்டம் முடிஞ்சுதான் வர முடியும்.. கடைசி 2 நாள் பேருக்கு வந்து பிரசாரம் செஞ்சுட்டா எப்படி மக்கள்கிட்ட ரீச் ஆகும்? மத்த கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டருங்க எங்களுக்கு ஆதரவா எப்படி வேலை பார்ப்பாங்களா? எப்படி ஓட்டு போடுவாங்களாம்? ஏன் இதையெல்லாம் டெல்லி சிந்திக்கவே இல்லைன்னு தெரியலையே”ன்னு ரொம்பவே வேதனையை வெளிப்படுத்துறாங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share