தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு- கருப்பு உடையில் தமிழக எம்.பிக்கள்!

Published On:

| By Mathi

Delimitation Bill

தொகுதிகள் மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் இன்று ஏப்ரல் 16-ந் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மக்களவையில் இந்த மசோதா மீது பேசிய காங்கிரஸ் எம்பி வேணுகோபால், “இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் இது; அரசியல் சாசனத்தையே கபளீகரம் செய்ய நினைக்கிறது பாஜக. இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து மக்களவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share