Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்- முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Mathi

Stalin Protest Call

தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீ வைத்து எரித்தும் தமது வீட்டில் கறுப்பு கொடி ஏற்றியும் முதல்வர் ஸ்டாலின் இன்று ஏப்ரல் 16-ந் தேதி போராட்டம் நடத்தினார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து,

பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!

ADVERTISEMENT

அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!

இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.

ADVERTISEMENT

இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.

“தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! என தமது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share