தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை: ராமதாஸ்!

By Balaji

|

Published on 14 Apr 2016, 12:00 AM

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நேற்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. பரப்புரைக்காக மக்களை வாகனங்களில் அழைத்துவருவது நடத்தை விதிகளின்படி குற்றமாகும். ஆனால், இந்த விதிகளை மதிக்காமல் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்துக்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சரக்குந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். இது, நடத்தை விதி மீறலாகும். ஆனால், இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்குச் சாலைகளில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கண்எதிரிலேயே தலா ரூ.300 வீதம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஊடகங்களும் இதை படம்பிடித்து வெளியிட்டன. ஆனால், இக்காட்சிகள் எதுவும் தேர்தல் அதிகாரிகளின் பார்வையில் படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel