மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்!

By Mathi

|

Published on 28 Nov 2026, 4:45 PM

Actor Prakash Raj Appeals to MK Stalin

மாநில உரிமைகளுக்காகப் போராடி இந்தியாவுக்கே வழிகாட்டிய திமுக, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் வரலாற்றுப் பிழையான முடிவை எடுக்கக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: அவசர அவசரமா திருத்தங்களோட பிஜேபி கொண்டு வர்ற தொகுதி மறுவரையறை மசோதா, டிலிமிடேஷன் பில் (Delimitation Bill) ரொம்ப ரொம்ப ஆபத்தானது.

மதம், மொழி, இனம், சிறுபான்மையருக்கு, இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இதை எல்லாருக்கும் உணர்த்திய திமுக, இன்னைக்கு மதவாத சக்திக்கு துணை போறது முதுகுல குத்துற செயல் இல்லையா? இது சுயநலமான முடிவு. ஒட்டுமொத்தமான மக்களுக்கு துரோகம் செய்ற இந்த முடிவை ஏற்க முடியாது.

ADVERTISEMENT

மாநில உரிமைக்குப் போராடி இந்தியாவுக்கே வழிகாட்டிய திமுக, இப்போ வரலாற்றுப் பிழையான ஒரு முடிவை எடுக்கக் கூடாது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யணும்னு வலியுறுத்தி கேட்டுக்கிறேன். இன்னைக்கு நீங்க எடுக்குற முடிவு அடுத்த தலைமுறையைத் தீர்மானிக்கப் போகுது. அடுத்த தலைமுறை இந்த முடிவால உங்களை எப்படி பார்க்கணும்ங்கிறதை நீங்களே முடிவு பண்ணுங்க. ப்ளீஸ். ஜஸ்ட் ஆஸ்கிங். இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel