”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”.. பிரதமர் மோடி- துணை ஜனாதிபதி ரியாக்‌ஷன்!

By Mathi

|

Published on 28 Nov 2026, 11:55 AM

Thiruparankundram modi

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என்று பதிவிட்டார். அவரது பதிவுக்குத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் நவம்பர் 24-ந் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அன்றைய தினம் உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகே தீபம் ஏற்றப்பட்டது. சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த மனுக்களை நவம்பர் 27-ந் தேதி விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, சர்வே கல் தூணில் நவம்பர் 28-ந் தேதி தீபம் ஏற்ற உத்தரவிட்டது. தீபம் ஏற்றும் நேரத்தை கோயில் ஸ்தானிகர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, நவம்பர் 27-ந் தேதி இரவு 10.17 மணிக்கு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என்ற முழக்கத்தைத் தமிழ், ஆங்கிலம், இந்தி எழுத்துகளில் பிரதமர் மோடி பகிர்ந்தார்.

ADVERTISEMENT

இந்தப் பதிவுக்குத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel