மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் தொகுதி மறுவரையறைக்கான புதிய அரசியல் சாசன திருத்த மசோதாவை நிபந்தனைகளுடன் திமுக ஆதரிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுகவின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் இன்று (நவம்பர் 28) திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா இதனை அறிவித்தார்.
திமுகவின் நிலை என்ன?
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஆ.ராசா கூறியதாவது: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற தொகுதி மறுவரையறை மற்றும் எண்ணிக்கை குறித்த மசோதாக்களின் மீது திராவிட முன்னேற்றக் கழகம் எப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறது என்பதை நீங்கள் அநேகமாக அறிந்திருப்பீர்கள். நேற்றைக்கும் தலைவருடைய அறிக்கை வந்திருக்கிறது. இப்போது நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலேயும் திடமான, தீர்க்கமான, ஆழ்ந்த சிந்தனையோடு தேசத்திற்கு எது நல்லது, தமிழ்நாட்டிற்கு எது நல்லது என்பதை நீண்ட விவாதத்திற்குப் பிறகு எடுத்திருக்கிறோம்.
அதன்படி இப்போது கொண்டு வந்து போயிருக்கின்ற- தாக்கல் செய்யப்பட இருக்கின்ற- எல்லா மாநிலங்களுக்கும் இருக்கின்ற நிலையிலிருந்து 50 விழுக்காட்டுக்கு அதிகமாக இடங்களை வழங்குவது என்கின்ற அந்த நிலைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தன்னுடைய ஆதரவை வழங்குவது என்று தீர்மானித்திருக்கிறோம்.
சட்டமன்ற தீர்மானம்
இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற போதும், இன்னும் சொல்லப் போனால் ஆட்சிப் பொறுப்பில் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றினார்.
அந்த சட்டமன்ற தீர்மானத்தில்- அனைத்து கட்சிகளினுடைய ஒப்புதலோடு என்ன முடிவு எடுத்தோமோ அந்த முடிவுக்கு ஏற்ப, அதற்குப் பிறகு முதலமைச்சராக இருந்து கொண்டே இந்தியாவில் இருக்கின்ற எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களையும், முதலமைச்சர்களையும் சென்னைக்கு அழைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழு – Joint Action Committee என்கின்ற அந்தக் குழுவை அமைத்து அதிலே தீர்க்கமாக ஒரு நாள் முழுக்க விவாதித்து சில மாநிலங்களுடைய முதலமைச்சர்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுத்தோமோ அந்த முடிவுக்கு ஏற்ப, அதற்குப் பிறகு இந்த அரசாங்கம் விஜய் தலைமையில் இருக்கிற இந்த அரசாங்கம் கொண்டு வந்த தீர்மானத்தில் அதே பங்களிப்பு குறையக் கூடாது என்கின்ற எங்களுடைய கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருக்கிற போதும், எதிர்க்கட்சியாக இருக்கிற போதும், கூட்டணியில் இருக்கிற போதும், கூட்டணியில் இல்லாத போதும் தேசத்திற்கே வழிகாட்டக் கூடிய ஒரே மாதிரியான ஒத்திசைவான consistent decision – there is no deviation, there is no departure at all என்று சொல்லக் கூடிய அளவுக்கு 7.18% கடந்த delimitation process-இன் போது மறுவரையின் போது தமிழ்நாட்டினுடைய பங்கு 7.18%
நியாயமான தொகுதி மறுவரையறை
பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள் உள்ள பல்வேறு மாநிலங்கள் அமையப்பெற்றிருக்கிற இந்தியாவில் ஒவ்வொரு மொழிவாரி மாநிலத்திற்கும் அந்தப் பண்பாட்டிற்கு, நாகரிகத்திற்கு குந்தகம் விளைவிக்காதவாறு அந்தப் பங்களிப்பை கடந்த முறை இந்திரா காந்தி அம்மையார் காலத்திலே 1971-இல் நடைபெற்றது. அதே பங்களிப்பு தொடர வேண்டும் என்பதுதான் fair limitation என்று காங்கிரஸ் கட்சி உட்பட அந்தக் கூட்டணியில் இருக்கிற எல்லா கட்சிகளும் we wanted to have a fair delimitation.
எந்த இடத்திலேயும் fair delimitation என்ற வார்த்தையைத் தவிர- நியாயமான தொகுதி மறு வரையறை என்பதைத் தவிர எந்த ஒரு புது யுக்தியையும் யாரும் அன்றைக்குச் சொல்லவில்லை. நாங்கள் என்ன முடிவெடுத்தோமோ, எங்கள் முடிவுக்கு யார் யாரெல்லாம் கட்டுப்பட்டார்களோ, காங்கிரஸ் கட்சி உட்பட இந்தியா கூட்டணியில் இருக்கிற எல்லா தலைவர்களும் உட்பட அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியும் எடுத்த முடிவுகளுக்கும் ஏற்பத்தான் இன்றைக்கு இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

புதிய முடிவு அல்ல..
எனவே திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ கூட்டணியிலே இல்லை என்பதற்காகப் பிரிந்து போய் வழியே ஒரு புதிய முடிவை எடுத்திருப்பதாகச் சித்தரிப்பது என்பது மிகக் கேவலமான அருவருப்பான செயல். அது அரசியல் நாகரிகம் அல்ல.
So far as DMK is concerned, we maintained full consistency when we were in power and we were out of power. So notwithstanding the political entity, notwithstanding the political power, we maintained our consistency that share of the Tamil Nadu 7.18 should not be affected (திமுகவைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தபோதும் ஆட்சியில் இல்லாதபோதும் ஒரே நிலைப்பாட்டில்தான் உறுதியாக இருந்தோம். அரசியல் சூழல் எப்படியிருந்தாலும், ஆட்சி அதிகாரம் யாரிடம் இருந்தாலும், தமிழ்நாட்டின் 7.18 சதவீதப் பங்கு பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருந்தோம்)
இதை இன்றைக்கு இருக்கின்ற இந்தத் தீர்மானத்திலும் நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். ஒன்றை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
7.21% கிடைத்துள்ளதே..
1971-இல் இதே மாதிரி ஒரு மறுவரை தொகுதி வரையறை செய்யப்பட்ட போது எண்ணிக்கை எமக்கு இரண்டு குறைந்தது. அந்த limitation process-ல DMK has lost two seats (அந்தத் தொகுதி மறுவரையறையின்போது திமுக 2 இடங்களை இழந்தது). ஆனால் இப்போது அந்த மாதிரி எந்த இழப்பும் கிடையாது. மிகச் சரியாக 7.18% என்பதற்குப் பதிலாக 7.21% என்ற அளவிலே கிடைத்திருக்கிறது. எனவே இதில் நட்டம் ஒன்றுமில்லை.
வேறு மசோதாக்களில் இருக்கிற வேறு பிரிவுகளில் சில குறைபாடுகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை எங்களுடைய தலைவரோடு விவாதித்திருக்கிறோம். எங்கெங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறதோ எல்லா கட்சிகளோடும் சேர்ந்து கலந்து அந்த நேர்வுகளுக்கு, அந்தப் பிரிவுகளுக்கு தேவைப்பட்டால் திருத்தங்களைக் கொண்டு வரலாமா என்பதையும் எங்களுடைய முடிவுக்கே எங்களுடைய தலைவர் விட்டிருக்கிறார். அதை நாங்கள் விரிவாக நாடாளுமன்றத்திலே பேசுவோம்.
இந்த எண்ணிக்கையைத் தாண்டி 59 என்கின்ற எண்ணிக்கை எங்களுக்கு உடன்பாடு. அதைத் தாண்டி delimitation commission, other process (தொகுதி மறுவரையறை ஆணையம், பிற நடைமுறைகள்), மற்ற இடங்களில் எங்கெங்கெல்லாம் நெருடல்கள் இருக்கிறதோ, எங்கெங்கெல்லாம் அச்சம் இருக்கிறதோ, எங்களுக்கெல்லாம் reservation இருக்கிறதோ, அதையெல்லாம் நாங்கள் வந்து நாடாளுமன்றத்திலே தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டு வரலாமா என்று கேட்டிருக்கிறோம். அதற்கு அவர் பேசிவிட்டு நீங்கள் அரசாங்கத்தோடு பேசிவிட்டு முறைப்படி செய்ய வேண்டியவை செய்யுங்கள் என்று எங்களுக்கு முழு அதிகாரம் அளித்திருக்கிறார்கள்.
இது 25 ஆண்டுகளுக்கு freeze பண்ணியிருக்கிறோம். ஏற்கனவே freeze பண்ண மாதிரி 25 ஆண்டுகளுக்கு freeze பண்ணியிருக்கிறோம். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்திலே உள்ளே இருக்கிற சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், அதையெல்லாம் தாண்டி அரசியல் கட்சியினுடைய மற்ற அரசியல் கட்சியினுடைய வழக்கறிஞர்களையும் கலந்து பேசி இதில் தமிழ்நாட்டுக்கு, தேசத்திற்கு ஒரு மிகப்பெரிய பாதிப்பு இருக்காது. தமிழ்நாட்டுக்கு குறிப்பாக இல்லை.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட்டால்..
அதைத் தவிர இந்த delimitation process-ல வேண்டுமென்றே சில இடங்களைத் திட்டமிட்டு சில தொகுதிகளை வரையறுப்பார்கள். அதிலே இஸ்லாமியர்கள் பாதிக்கப்படலாம், மொழிவாரி சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படலாம், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படலாம். gerrymandering என்று சொல்கிறார்களே, நமது மாண்புமிகு சிதம்பரம் அவர்கள் அந்த அச்சத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த பிஜேபி வேண்டுமென்றே இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை மனதிலே வைத்துக்கொண்டு gerrymandering, pick and choose அவர்களை ஓரப்படுத்த வேண்டும், அவர்களை வந்து உதாசீனப்படுத்த வேண்டும் அல்லது விளிம்பு நிலைக்குக் கொண்டு போக வேண்டும் என்கின்ற முயற்சியை இந்தச் சட்டப்பிரிவின் வாயிலாக எடுப்பார்களேயானால் அதைத் தடுப்பதற்கான எல்லா முயற்சியையும் நாணயமாக சிறுபான்மை மக்களுடைய பிரதிநிதியாக, நண்பனாக கண்டிப்பாகப் போராடுவோம். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆ.ராசா அளித்த பதில்:
செய்தியாளர்: 7.18 வந்து disturbance எதுவும் இருக்காதுன்னு… சொல்லக் கூடிய assurance கொடுத்திருக்காங்களா? 7.18 எந்த disturbance-ம் இருக்காது.
ஆ. ராசா: பில்லிலேயே இருக்கே. assurance not necessary, it is already incorporated in the bill itself.
செய்தியாளர்: இவ்வளவு நாளா வந்து பாஜக கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் கடுமையா எதிர்த்த திமுக, இதை மட்டும் ஆதரிக்க வேண்டியது ஏன்?
ஆ. ராசா: அப்படி இல்லை, திட்டங்கள் சரியா இருந்தா ஏத்துக்க வேண்டியதுதானே. சார், our consistency was share of the Tamil Nadu 7.18 should not be disturbed or altered. It is being maintained. What is your problem? (தமிழ்நாட்டின் 7.18 சதவீதப் பங்கு பாதிக்கப்படவோ மாற்றப்படவோ கூடாது என்பதுதான் எங்களுடைய நிலையான நிலைப்பாடு. அந்தப் பங்கு அப்படியே தொடர்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சினை?)
செய்தியாளர்: காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியெல்லாம் கடுமையா எதிர்க்கிறாங்களே?
ஆ. ராசா: ஏன், அதான் எனக்கு ஒண்ணும் புரியல, என்ன எதிர்த்தீங்க? காங்கிரஸ் கட்சி எங்களோடு இருக்கும் போது நீங்க என்ன demand வச்சீங்க, காங்கிரஸ் எங்களோடு இருக்கும் போது demand இதுதான். அந்த demand-ல இருந்து திமுக நழுவிடுச்சு. ஸ்டாலின் நழுவிட்டார் சொல்லு, ஏத்துக்கிறோம். சார், நாங்கதானே உங்களுக்கே வழிகாட்டினோம். நாங்கதான் fair delimitation-க்கு கேட்டோம்.
செய்தியாளர்: சார், உத்தரப் பிரதேசத்திற்கும் நமக்கும் 60 தொகுதிகள் இடைவெளி இருக்கும். இப்ப 40-ஆ இருக்கிறது 60-ஆ உயரும்னு ஒரு குற்றச்சாட்டு…
ஆ. ராசா: அங்க அவங்களுக்கு என்ன share 71-ல கொடுத்தாங்களோ அந்த share மாறக்கூடாது அவ்வளவுதானே. இந்தியா வந்து ஒரு block. அந்த block-ல ஒவ்வொரு state-க்கும் ஒரு share. அந்த share-அ 71-ல எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து இந்திரா காந்தி, வாஜ்பாய் எல்லாரும் சேர்ந்து திமுகவும் சேர்ந்து ஒத்துக்கிட்டாங்க. அதுல நமக்கு ரெண்டு seat நட்டம். நம்ம ஒத்துக்கிட்டோம். ரெண்டு seat கம்மியா இருந்தா கூட தேசத்தின் நலன் கருதி, ஒற்றுமையைக் கருதி ஒத்துக்கிட்டோம். இப்ப ரெண்டு seat குறையலையே, கூடத்தானே வந்திருக்கு? What is your problem?. இவ்வாறு ஆ.ராசா கூறினார்.









