திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் :ஓய்வு பெற்ற நீதிபதி அறிவிப்பு!

By Kavi

|

Published on 28 Nov 2026, 1:08 PM

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கடந்த நவம்பர் 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

ADVERTISEMENT

ஆனால் இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாததால், கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 28) கட்டாயம்  தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. 

அதோடு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் அறங்காவலர் குழு கலைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் தலைமையில் குழு அமைத்தது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதிகள் இன்று காலை மதுரைக்கு வருகைத்தந்தனர். அப்போது அவர்கள், உச்ச நீதிமன்ற ஆர்டரை நாங்கள் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. அதை படித்துவிட்டு, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படி செய்வோம் என்று கூறினர். 

தொடர்ந்து மலை அடிவாரத்துக்கு வந்த அவர்கள், சிஆர்பிஎப், பாதுகாப்புடன் மலைக்கு செல்கின்றனர். அங்கு தீபம் ஏற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிடுகின்றனர். 

ADVERTISEMENT

மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவும் கொப்பரையுடன் வருகைத் தந்துள்ளார். 

இந்தநிலையில் மலை அடிவாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி  எஸ்.வைத்தியநாதன், மேலே மீடியாவுக்கு அனுமதி இல்லை. மாலை 5 மணிக்கு அந்த தூணில் தீபம் ஏற்றப்படும் என்று தெரிவித்தார். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel