கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் மின்வெட்டு.. பதிலடியாக ‘சம்பவம்’ செய்த திமுக!

Published On:

| By Mathi

Power Outage at DMK Kalaignar Birthday Meeting

சென்னை அருகே அம்பத்தூரில் கலைஞர் பிறந்த நாள் (Kalaignar Birthday) பொதுக் கூட்டத்தில் திடீர் மின்வெட்டு (Power Cut) ஏற்பட்டது. இதனையடுத்து பொதுக் கூட்டத்தையே கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றி தமிழக அரசைக் கண்டித்து திமுகவினர் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூரில் நேற்று ஜூன் 14-ம் தேதி கலைஞர் 103-வது பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இந்த மின்வெட்டு சுமார் 20 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது. இதனால் கொந்தளித்து போன திமுகவினர், அந்த பொதுக் கூட்டத்தையே கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றிவிட்டனர். தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராகவும் தொடர் மின்வெட்டைக் கண்டித்தும் திமுகவினர் முழக்கங்கள் எழுப்பி திடீர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share