முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு நாளை விசாரணை: சங்கீதா நீதிமன்றம் வருவாரா?

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரித் தொடர்ந்த வழக்கு, நாளை (ஜூன் 15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா, கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பின்னர், ஏப்ரல் 20ஆம் தேதி முதற்கட்ட விசாரணை நடைபெற்றபோது, இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, பதில் மனுத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வேண்டும் என விஜய் தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி, நாளைய தினம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதனால், நாளைய விசாரணையின்போது விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share