விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு : நீதிபதி இடமாற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2021ஆம் ஆண்டு முதல் தன் கணவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சங்கீதா குற்றம் சாட்டியிருந்தார்.

ADVERTISEMENT

மேலும், பலமுறை சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் வரும் ஜூன் 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் விவாகரத்து வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையில், விஜய்-சங்கீதா வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுஜாதா மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share