வைஃபை ஆன் செய்ததும், “ நாளை நமதே.. இந்த நாளும் நமதே..”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ரொம்பவே நம்பிக்கையா பாடுறீரு?
நம்ம நம்பிக்கைகள் இருக்கட்டும்.. எலக்ஷன் வாக்குப் பதிவு முடிஞ்ச உடனே சிஎம் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி எல்லாம் டிஸ்கஷன் செஞ்சாங்கன்னு நேத்து சொல்லி இருந்தோம் இல்லையா..
கடந்த 2 நாட்களாக விஜய் தவெகவினர் சோசியல் மீடியாவில் காட்டுகிற நம்பிக்கை இருக்குதே.. யப்பா.. எல்லாரையும் மெர்சலாக்கிடுறாங்க..
விஜய் தலைமையிலான அமைச்சரவை பட்டியல்னு ஒன்னை ரிலீஸ் செஞ்சிருந்தாங்கன்னு நேத்து சொல்லி இருந்தோம்.. அது எதிர்க்கட்சிகள் சதின்னு தவெக பதில் சொல்லிகிட்டு இருக்குது..
இப்படி சோசியல் மீடியாவுல மட்டுமல்ல.. பிராக்டிக்கலாகவே தவெக நிர்வாகிகள் ரொம்பவே நம்பிக்கையா இருக்கிறாங்க.. சென்னையில நேத்து கூட முக்கியமான டிஸ்கஷன் ஒன்னை தவெக நடத்தி இருக்குது..
இதை பத்தி விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “இந்த எலக்ஷன்ல போட்டியே திமுகவுக்கும் தவெகவுக்கும்தான்னு விஜய் தொடர்ந்து பிரசாரம் செஞ்சாரு.. எலக்ஷன் ரிசல்ட்டும் அப்படித்தான் வரும்.. ஒன்னு ஆட்சி அமைப்போம்.. இல்லைன்னா எதிர்க்கட்சியாக வருவோம் அப்படிங்கிற நம்பிக்கை தவெக நிர்வாகிகள் அத்தனை பேருக்குமே இருக்குது..
எலக்ஷன்ல 50,000 ஓட்டுக்கும் அதிகமாக வாங்கக் கூடிய, ஜெயிக்கக் கூடிய 40 தவெக வேட்பாளர்களை சென்னைக்கு நேத்து வரவழைச்சாங்க.. அவங்ககிட்ட செங்கோட்டையனும் புஸ்ஸி ஆனந்தும் சில விஷயங்களை சொல்லி அனுப்பி இருக்காங்க..
அந்த கூட்டத்துல, மே 4-ந் தேதி கவுண்ட்டிங் அன்னைக்கு எப்படி எல்லாம் ரொம்ப கவனமா நடந்துக்கனும்னு அதிகமாக இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தாங்க.. ஒவ்வொரு ரவுண்டும் கரெக்டா எண்ணி இருக்காங்களான்னு நீங்களும் சரி பார்த்து அதுக்கு அப்புறம்தான் கையெழுத்து போடனும்னு சொன்னாங்க..
அதோட, கடந்த காலங்களில்ல ரொம்ப குறைவான ஓட்டுல ஜெயிச்சவங்களை எதிர்த்து போட்ட கேஸ் நிறைய இருக்கு.. ராதாபுரத்துல அதிமுக இன்பதுரை 49 ஓட்டுல ஜெயிச்சதுக்கு எதிராக அப்பாவு கேஸ் போட்டிருந்தாரு.. ப.சிதம்பரத்துக்கு எதிராக ராஜகண்ணப்பன் வழக்கு போட்டாரு.. காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் தோல்வியடைந்தப்ப வழக்குன்னு நிறைய உதாரணம் இருக்கு.. இதையெல்லாம் கவனத்துல வெச்சுகிட்டு ரொம்பவே உஷாரா கவுண்ட்டிங் சென்டரில் இருக்கனும்”னு அட்வைஸ் பண்ணி அனுப்பி வெச்சிருக்காங்க..
திமுகவும் ஆட்சி அமைப்போம்னு நம்பிக்கை இருக்கு.. அதிமுகவும் நம்ம ஆட்சிதான் அமையும் கான்ஃபிடன்ட்டா இருக்கு.. விஜய் கட்சி அமைச்சரவை ரேஞ்சுக்கு போயிருச்சு.. மே 4-ந் தேதி பார்ப்போம்.. யாரோட நம்பிக்கை ஜெயிக்குதுன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
