”திராவிட பெருஞ்சூரியன்”… கலைஞர் 103-வது பிறந்த நாள்.. மரியாதை செலுத்திய தமிழக அரசு! நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Published On:

| By Mathi

Kalaingar 103 Birth Day

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் (Kalaignar)103-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மரியாதை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞர் சிலைக்கு கீழே வைக்கப்பட்ட கலைஞரின் படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு

சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில்,

மறுமை இல்லை
என மக்களிடையே
பகுத்தறிவு
முழங்கிய முரசு!

ADVERTISEMENT

மடமை கொடுமை
கண்டு
கொதித்தெழுந்த
கருத்தியல் அரசு!

இளமை வளமை
என அன்னைத்தமிழை
செம்மொழியாக்கிய
தமிழர் பரிசு!

ADVERTISEMENT

தமிழை இலக்கிய
இனிமையாக்கிய
தொல்காப்பியத்தின்
வாரிசு!

என கலைஞருக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.

கலைஞர் நினைவிடத்தில்..

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதேபோல ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் சிலைக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

திராவிட பெருஞ்சூரியன்

கனிமொழி எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “தெற்கிலிருந்து உதித்த திராவிட பெருஞ்சூரியன் அவர். தலைமுறைகள் தலைநிமிர ஓய்வின்றி உழைத்த அந்த சூரியனுக்கு தமிழ் வானில் ஏது மறைவு!” என தெரிவித்துள்ளார்.

படங்கள்:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share