கமல் படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் நடிகை!

Published On:

| By christopher

கமல் ஹாசனின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்திற்கு ’தக் லைஃப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

ADVERTISEMENT

சமீபத்தில் தக் லைஃப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு நேற்று நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் இணைந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

பொங்கல் விடுமுறை : கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் அலைக்கழிக்கப்படும் மக்கள்… தப்பிக்க என்ன வழி?

அங்கித் திவாரி நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

இடைக்கால தடை நீக்கம்: திட்டமிட்டபடி வெளியாகிறது அயலான்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share