ரவுடி சீர்காழி சத்யாவை சுட்டுப் பிடித்த போலீஸ்!

Published On:

| By Kavi

மாமல்லபுரம் அருகே ரவுடி சீர்காழி சத்யாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் சத்யா. இவர் மீது கொலை, வழிபறி வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்.

இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக சீர்காழி சத்யா மற்றும் அவரது நண்பர்கள் மாமல்லபுரம் அருகே காரில் இன்று (ஜூன் 28) வந்துகொண்டிருந்தனர்.

இதற்கிடையில் இவர் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்தசூழலில் மாமல்லபுரம் அருகே சீர்காழி சத்யா பயணம் செய்கிறார் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த அடிப்படையில் வடநெமிலி செக் போஸ்ட் அருகே வந்த சீர்காழி சத்யாவின் காரை மடக்கி பிடித்தனர்.

அப்போது அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும், இதில் ரஞ்சித் என்ற அதிகாரி காயமடைந்ததாகவும், இதனால் சீர்காழி சத்யாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

சீர்காழி சத்யா உட்பட அவரது நண்பர்கள் மூன்று பேரை போலீசார் பிடித்துள்ளனர்.

போலீசார் சுட்டதில் காலில் படுகாயமடைந்த சத்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர் 2021ல் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘கள்ளச்சாராய மரணத்தில் கபட நாடகம்’ : எடப்பாடியை அட்டாக் செய்த கருணாஸ்

நீங்கள் கேட்டவை – கமர்ஷியல் படங்களுக்கான ஒரு முன்னோடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share