PETROL DIESEL PRICE HIKE: மக்களே உஷார்! 2 வாரத்தில் 4-வது முறை.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

Published On:

| By Mathi

Petrol and Diesel Prices

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் (Petrol & Diesel) விலை மீண்டும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவின் போர்ச் சூழல், சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மையமான ஹோர்முஸ் ஜலசந்தியில் நீடிக்கும் பதற்றம் ஆகியவற்றால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

கடந்த 2 வாரங்களில் இன்று மே 25-ந் தேதி 4-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  • 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ2.61 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
  • 1 லிட்டர் டீசல் விலை ரூ.2.71 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

விலை உயர்வு (மே 15 – மே 25, 2026)

ADVERTISEMENT
தேதிபெட்ரோல் விலை உயர்வு டீசல் விலை உயர்வு
மே 15 ரூ. 3.00 / லிட்டர்ரூ. 3.00 / லிட்டர்
மே 19 0.90 காசுகள் / லிட்டர்0.90 காசுகள் / லிட்டர்
மே 23 0.91 காசுகள் / லிட்டர்0.87 காசுகள் / லிட்டர்
மே 25 ரூ. 2.61 / லிட்டர் ரூ. 2.71 / லிட்டர்
மொத்த உயர்வு (10 நாட்களில்)சுமார் ரூ. 7.42சுமார் ரூ. 7.48

இதனைத் தொடர்ந்து புது டெல்லியில்
பெட்ரோல்: ரூ. 102.12 (ரூ. 99.51-லிருந்து உயர்வு); டீசல்: ரூ. 95.20 (ரூ. 92.49-லிருந்து உயர்வு)-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல்: ரூ. 107.90+; டீசல்: ரூ. 99.60+-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

மும்பையில் பெட்ரோல்: ரூ. 111.10; டீசல்: ரூ. 97.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் பெட்ரோல்: ரூ. 113.25; டீசல்: ரூ. 99.73-க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நகரம்  பெட்ரோல்டீசல்
சென்னை₹105.33₹97.00
திண்டுக்கல்₹106.55₹98.25
மதுரை₹105.99₹97.95
கோயம்புத்தூர்₹105.76₹97.48
திருச்சி₹105.50₹97.18
சேலம்₹106.10₹97.75

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share