டிஜிட்டல் திண்ணை: மே 28..நெருங்குது கெடு..எடப்பாடி கேட்கும் ‘மன்னிப்பு’ கடிதம்! ‘தூது’ விடும் விஜய்! கடும் குழப்பத்தில் வேலுமணி குரூப்!

Published On:

| By Mathi

Digital Thinnai AIADMK Vijay EPS

வைஃபை ஆன் செய்ததும், “நான் எங்கே போனாலும்” பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்ன ப்ரோ.. சந்தோஷ் நாராயணன் மியூசிக்குல இறங்கிட்டீங்க..

அப்படியா.. பாட்டு நல்லா இருந்துச்சு.. நான் சொல்ற விஷயத்துக்கும் பொருத்தமா தோணுச்சு ப்ரோ..

ADVERTISEMENT

அப்படியா? எந்த கட்சி மேட்டர் ப்ரோ?

எடப்பாடி பழனிசாமி கூட சண்டை போட்டுகிட்டு சிஎம் விஜய்யை ஆதரிச்சாங்களே எஸ்பி வேலுமணி டீமின் 25 எம்.எல்.ஏக்களை பத்திதான் ப்ரோ..

சிஎம் விஜய்க்கு ஆதரவா ஓட்டுப் போட்டாலும் அமைச்சரவையில இடம் இல்லைன்னு கதவை சாத்திட்டாங்க.. இதனால எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆபரேஷன் பெயிலியர் ஆகிடுச்சு..

ADVERTISEMENT

இதுக்கு காரணமே புஸ்ஸி ஆனந்த், விஷ்ணு ரெட்டிதான்னு இந்த டீம் செம்ம கோபத்துல இருக்காங்க.. அவங்கதான் சரியா சிஎம் விஜய்யை கன்வீன்ஸ் பண்ணலைங்கிற வருத்தம்.. ஆரம்பத்திலேயே இதை பத்தி பேசி நல்ல முடிவா எடுக்காம விட்டுட்டாங்கன்னும் காண்டுல இருக்காங்க

இப்போதைக்கு எஸ்பி வேலுமணி டீமுக்கு ஒரே ஒரு ஆப்ஷன் எடப்பாடி பழனிசாமிகிட்டே திரும்ப வர்றதுதான்..

ADVERTISEMENT

ஆனா இதுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷனால எஸ்பி வேலுமணி டீம் ஜெர்க் ஆகி நிக்குது..

இதை பத்தி அதிமுக சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, “அதிமுக மா.செ.க்கள் கூட்டத்துலேயே எஸ்பி வேலுமணி டீம் திரும்ப வர்றதை பத்தி எடப்பாடி ஓபனா பேசினாரு.. எஸ்பி வேலுமணி டீம் திரும்ப வந்தா பேசுறதுக்கு ரெடின்னும் சொல்லி இருந்தாரு.. அதுக்கு முன்னாடியே அறிக்கையும் வெளியிட்டிருந்தாரு..

இப்ப அமைச்சர் பதவி கிடைக்காததால அவங்க பலரும் ரிட்டர்ன் ஆக விரும்புகிறாங்க..

எஸ்பி வேலுமணி டீம் எடப்பாடிகிட்ட கேட்குறது எல்லாம் ஒன்னுதான்.. ”எங்க கிட்ட இருந்து பறிச்ச கட்சி பதவிகளை திரும்ப கொடுத்துடுங்க”.. அப்படிங்கிறதுதான்..

எடப்பாடி பழனிசாமியோ, ”முதல்ல எல்லாரையும் மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்லுங்க.. அடுத்ததா, புதுசா மா.செ.க்களை இப்பதான் போட்டிருக்கிறோம்.. அவங்களை உடனே மாத்துனா சரியா வராது.. அதனால கட்சி பதவிகளை பத்தி கொஞ்ச நாள் போகட்டும் பார்த்துக்கலாம்”னு சொல்லி இருக்கிறார்.

ஆனா, ”எதுக்கு மன்னிப்பு கடிதம் தரனும்?”னு எஸ்பி வேலுமணி டீம் டென்ஷனாகி இருக்கு…

அதுக்கு, ”25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சொல்லி ஏற்கனவே சபாநாயகர்கிட்ட மனு கொடுத்தாச்சு..

“வாக்கெடுப்பு நடக்கும் போது கொறடா உத்தரவை மீறுன எம்.எல்.ஏக்களை அவங்க கட்சி தலைமை, வாக்கெடுப்பு நடந்த நாளில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 28) மன்னிச்சுட்டா ’தகுதி நீக்க’த்தில் இருந்து தப்பிச்சுடுவாங்க”ன்னு அரசியல் சட்டம் சொல்லுது.. அதனால மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்றோம்”னு விளக்கமும் சொல்லியாச்சு..

இதை புரிஞ்சுகிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்களில் பலர், மன்னிப்பு கடிதம் கொடுத்துட்டு எடப்பாடிகிட்ட ரிட்டர்ன் ஆக ரெடியாகிட்டாங்க..

என்னதான் எம்.எல்.ஏ.க்கள் பலரும் திரும்ப வந்தாலும் எஸ்பி வேலுமணி மேல மட்டும்தான் எடப்பாடிக்கு தீராத கோபமாம்.. ”வேலுமணிதான் எல்லாத்தையும் தூண்டிவிட்டது.. அவருதான் இவ்வளவுக்கும் காரணம்.. சிவி சண்முகம் கூட ஓபனா பேசிடுவாரு.. இப்படி எல்லாம் செய்ய மாட்டாரு.. அதனால அவங்களை மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்லுங்க.. பார்க்கலாம்”ன்னு கேபி முனுசாமி, கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கிட்ட எடப்பாடி சொல்லி இருக்கிறாராம் ப்ரோ..

சரிங்க ப்ரோ.. சிஎம் விஜய் சைடுல என்ன சொல்றாங்களாம்?

எடப்பாடி பழனிசாமியுடன் ‘ரிட்டர்ன்’ பேச்சுவார்த்தை நடக்குறதால சிஎம் விஜய் சைடுல இருந்து எஸ்பி வேலுமணி டீம்-க்கு ஒரு மெசேஜ் போயிருக்காம்..

அதாவது, “எம்.எல்.ஏ. பதவி போனா பரவாயில்லை.. தவெகவில இணைஞ்சுடுங்க.. இடைத் தேர்தலில்ல அதே தொகுதியில போட்டியிட்டு ஜெயிச்சுடுங்க.. அப்புறமா பார்த்துக்கலாம்”னு சொல்லி இருக்கிறாராம் சிஎம் விஜய்.

அப்படி 25 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தா கணிசமான எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கும்; ஆட்சிக்கு பெரும்பான்மையும் கிடைச்சுடும் அப்படிங்கிறதுதான் சிஎம் விஜய்யோட ஸ்கெட்ச்சாம்..

அதனால எடப்பாடி சொல்றபடி மன்னிப்பு கடிதம் கொடுத்து எம்.எல்.ஏ. பதவியை தக்க வெச்சுக்குவாங்களா? எம்.எல்.ஏ. பதவியே போனாலும் பரவா இல்லைன்னு விஜய் கட்சியில சேருவாங்களா?ன்னு சஸ்பென்ஸ் தொடருதுங்க ப்ரோ என டைப் செய்தபடி சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Digital Thinnai : மே 28-க்குள் ‘அது’ நடக்குமா? 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கதி?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share