நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: 59.45% வாக்குப்பதிவு!

Published On:

| By Selvam

2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கியது. ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

பிகார், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி, மத்திய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிடும் ஹிமர்பூர், கங்கனா ரணாவத் போட்டியிடும் மண்டி உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இரவு 8.45 மணி நிலவரப்படி 59.45% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிகார் – 50.79%

சண்டிகர் – 62.80%

ஹிமாச்சல் பிரதேசம் – 67.53%

ஜார்க்கண்ட் – 69.59%

ஒடிசா – 63.57%

பஞ்சாப் – 55.86%

உத்தரபிரதேசம் – 55.60%

மேற்குவங்கம் – 69.89%

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Exit Polls 2024: தமிழகத்தில் முந்துவது யார்?

கருடன்: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share