சென்னை 600 028 – பார்ட் 2: படப்பிடிப்பு தொடக்கம்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 600 028’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர், அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்தார். முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் தற்போது ஓய்வில்லாமல் பல படங்களில் நடித்துவருவதால், அவர்களை வைத்து இரண்டாம் பாகம் இயக்க முடியுமா? என்று தயங்கி வந்தார். இந்நிலையில், அந்த நடிகர்கள் எல்லோரும் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உறுதியளித்தனர். இதனையடுத்து, ‘சென்னை 600 028 – இரண்டாம் பாகம்’ படத்துக்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், அந்தப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது தொடங்கி இருக்கிறார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel