திமுக எம்.பி. கனிமொழி நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் வீடு வீடாகத் திண்ணைப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்திற்குப் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று கடையம் அருகே நடைபெற்ற அரசியல் சார்பற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்ட கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்காக இருக்கும். அதுமட்டுமின்றி அனைத்து மருத்துவமனைகளிலும் மது அடிமைகள் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். பூரண மதுவிலக்கு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக ஒலிக்கிறது. இந்தக் கோரிக்கையை கருணாநிதி நிறைவேற்றுவார்” எனத் தெரிவித்தார்.
கனிமொழி வீடு வீடாகத் திண்ணைப் பிரச்சாரம்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








