ADVERTISEMENT

ஓ.பன்னீர்செல்வம் சபரீசன் திடீர் சந்திப்பு!

Published On:

| By Kavi

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 6) சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் இந்த போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மைதானத்தில் திறந்து வைத்த கலைஞர் கருணாநிதி கேலரியிலிருந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று இன்றும் உரிமை கொண்டாடி வரும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்.

ஆனால் இந்த போட்டி முடிந்த சில நிமிடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடைய மருமகனான சபரீசனை ஓ பன்னீர்செல்வம் கேலரியில் இருக்கும் உள் அறையில் சந்தித்து பத்து நிமிடங்கள் தனியாக உரையாடி இருக்கிறார்.

ADVERTISEMENT

பன்னீர்செல்வத்திடம் தனது குழந்தைகளை அறிமுகப்படுத்திய சபரீசன் அதற்குப் பிறகு அவருடன் தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பை நடத்தி இருக்கிறார்.

ஏற்கனவே பன்னீர்செல்வம் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வரும் இந்த நிலையில்… கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த சந்திப்பு பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ஆரா

13 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை வீழ்த்திய சென்னை: சுவாரசிய சம்பங்களின் தொகுப்பு!

விமர்சனம்: தி கேரளா ஸ்டோரி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share